2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவிப்பு..!
2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்திருப்பது சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன் அதனை பதப்படுத்துவதற்கும் சுழற்சி முறையில் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாட்டங்களில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் உலக நாடுகளில் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிப்பதே இந்தியாவின் நோக்கம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொரோனா பெருந்தொற்று, பருவநிலை மாறுபாடு, போர்பதற்றம் போன்றவையால் சிறுதானியங்களின் தேவை உலக நாடுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





