--- --:--:-- --

80 அடி ஆழக்கிணற்றில் விழுந்த இரு இளைஞர்கள்..!

7

புதுக்கோட்டையில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய இரண்டு தொழிலாளர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்..கல்லுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் விவசாய கிணற்றில் உள்ள மின்சார மோட்டாரை பழுது பார்க்க அழகு முருகன் மற்றும் மகேந்திரன் சென்றனர்.

 

கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கிய பொழுது திடீரென கயிறு அறுந்து இருவரும் உள்ளே விழுந்தனர். தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் வந்து இருவரையும் கயிறு கட்டி மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon