--- --:--:-- --

எளிமையாக நடந்த நடிகை ரித்திகா திருமணம்..!

8

சீரியல் நடிகை ரித்திகா தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ரித்திகா திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

 

அதையடுத்து அவர் யாரை திருமணம் செய்ய உள்ளார் என்று கேள்வியும் ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையின் நடிகை ரித்திகாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினய் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். இவர் விஜய் டிவியின் முக்கிய நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. திருமண வரவேற்பு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த புதுமண தம்பதிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon