--- --:--:-- --

தவறான நரம்பு ஊசியால் பெண்ணின் கை அழுகிப்போனது..!

9

கடலூரில் பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவரது கை விரல்கள் அழுகியதாக புகார் முன்வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பண்ருட்டி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்படவே பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது அவரது வலது கையில் நரம்பு ஊசி செலுத்துவதற்காக துளை கருவியை பயன்படுத்தி உள்ளனர். பின் நிகழ்ச்சிகள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அவரின் வலது கைவிரல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனே மருத்துவரிடம் சென்று கையை காண்பித்த பொழுது மருத்துவர்கள் சரியாகிவிடும் எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வலது கை முழுவதும் அழுக ஆரம்பித்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று காண்பித்துள்ளார்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரம்புசி செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட துளை கருவியால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குப்பு பண்ருட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். மருத்துவரின் கவன குறைவால் தான் எனக்கு இவ்வாறு நிலைமை ஏற்பட்டது எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon