மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிப்பு..!
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழையால் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறினார்.
95 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். குடிசை வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்திருந்தால் குடிசைகளுக்கு தலா 4,400 ரூபாயும் 10 கிலோ அரிசியும் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ஐந்தாயிரம் ரூபாயும், வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் 4,800 ரூபாயும் வழங்கப்படும் இதே போல் கால்நடைகள் இழப்புக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசு எருமைகள் இறந்திருந்தால் தலா 30,000. எருதுகளுக்கு தலா 25,000. கன்று குட்டிகளுக்கு தலா 16,000. மாடுகளுக்கு தலா மூன்றாயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு தலா 100 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





