பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு..!
திருப்பூரில் பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிரேமாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் மருத்துவமனையிலேயே இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசவத்திற்கு பின் பிரேமாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் வேறு மருத்துவமனை அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே தாய் பிரேமா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





