--- --:--:-- --

திருப்பூரில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்..!

7.1

திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோளிபாளையம் கிராமத்தில் உள்ள சீனிவாசா நகர் முதல் வீதியில் குடியிருக்கும் சிவன்மலை முதலியார் என்பவரது மகன் 68 வயதான கோபாலன்.

 

கடந்த 5 ம் தேதி 3.30 மணியளவில் 62 வயதான அவரது மனைவி முத்துலட்சுமி என்பவர் தனியாக இருந்தபோது அவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளார். வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணம் ரூபாய் 9,82,000 திருடப்பட்ட து தொடர்பாக 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய 24 வயதான அருண்குமார், 27 வயதான தினேஷ்குமார், 21 வயதான அமரன் ஆகியோர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கிற்கும் , பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் ஆணையிட்டுள்ளார் .

கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 வயதான .அருண்குமார், 27 வயதான தினேஷ்குமார், 21 வயதான அமரன் ஆகியோர்களுக்கு ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று ஆணை வழங்கப்பட்டது .

 

திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 74 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் , 2 நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி மாதம் முதல் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon