ஓடும் பேருந்தில் ஹெட்போனுக்காக ஏற்பட்ட சண்டையில் ரத்தக்காயம்..!
பல்லடம் அருகே ஓடும் பேருந்தில் பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து சிவகாசி செல்லும் பேருந்தில் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் மதுரையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சேகர் ஆகியோர் ஒன்றாக பயணித்துள்ளனர்.
அப்பொழுது கார்த்திக்கின் ஹெட்போனை ராஜேஷ் பயன்படுத்தி வந்துள்ளான். பல்லடம் அருகே பேருந்து சென்ற பொழுது கார்த்திக் தனது ஹெட் போனை கேட்டுள்ளான். ராஜேஷ் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சேகர் இருவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






