ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பிய மக்கள்..!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும் என மக்கள் கோஷமிட்ட பொழுது பொறுமை வேண்டும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்பொழுது மருத்துவமனைகளின் அவசியம் பற்றி குறிப்பிட்டவர் இமாச்சலப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மருத்துவமனைகள் திறப்பதற்கான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் சுட்டிக்காட்டினார்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு பிரிவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வேண்டும் என கூறினார். அதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுமை வேண்டும் என கூறினார்.






