--- --:--:-- --

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு ..!

2

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் எட்டாம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

 

குஜராத் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை எடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேர்தலை அறிவித்தார். 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பர் ஒன்றாம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி நிறைவடைகிறது.

 

மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Right Menu Icon