--- --:--:-- --

இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

2

மிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டம் பல்வேறு இடங்களில் நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

 

மழை பெய்யும் என்பதால் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாநகர் பகுதி முழுவதும் இரவில் பரவலாக மழை பெய்தது.

 

Right Menu Icon