பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்த காதலன்..!
கும்மிடிப்பூண்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் திடீரென மாயமானார்.
ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த பகுதியில் காயத்துடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 19 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவிக்கும், மாணவனுக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும் திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி சிறுவனுடன் சேர்ந்து மாணவியின் தலையில் கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





