அத்திவரதர் தரிசனத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் காயம்
அத்திவரதர் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியதில், 5 பக்தர்கள் காயம் அடைந்தனர். விஐபி தரிசன வழியில் உள்ள கூடாரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 பேருக்கு முகாமில் சிகிச்சை தரப்பட்டு, அவர்கள் மீண்டும் தரிசனத்திற்கு சென்றனர். மின்கசிவு இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




