அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு
தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளார். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீரை தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்த பல சிறப்பு சலுகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் முஸாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி என்பவர் கட்சி தொண்டர்களிடம் பேசினார்.அப்போது, ‘370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும்.
பாஜகவில் உள்ள இளைஞர்கள் காஷ்மீருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம், நிலம் வாங்கலாம்’ என்று அவர் கூறினார்.பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. அந்தப் பேச்சுக்கு விமர்சனங்களும் எழுந்தது. பின்னர், இதுகுறித்து பேசிய விக்ரம் சைனி, சர்ச்சைக்குரிய வகையில் தான் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




