அமைச்சர்களுக்கு முதலமைச்சர் போட்ட உத்தரவு..!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 17ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வழக்கின் பருவமழை முன்னேற்பாடுகள் நெல் கொள்முதல் மற்றும் அரசு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் துறைரீதியான கேள்விகளுக்கு அமைச்சர்கள் உணர்ச்சிவசப்படாமல் உரிய பதில்களை முறையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய சட்ட மசோதா ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை உள்ளிட்ட சட்ட மசோதா குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.





