இபிஎஸ் ஓபிஎஸ் எழுதிய கடிதங்கள் மீது சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு என்ன..?
தமிழக சட்டப்பேரவை வரும் 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு இபிஎஸ் ஓபிஎஸ் எழுதிய கடிதங்கள் மீது என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு முறை கடிதங்களை வழங்கியுள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப் பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்பதன் அடிப்படையில் ஆர் பி உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எந்த இடம் ஒதுக்கப்படும் என்று கேள்வி பேசு பொருளாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




