வெள்ளிக் கொலுசுகளை திருடுவதற்காக மூதாட்டியின் கால்களை வெட்டிய கும்பல்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெள்ளிக் கொலுசுகளை திருடுவதற்காக மூதாட்டியின் கால்களை வெட்டிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நூறு வயதை கடந்த மூதாட்டி ஒருவரின் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மூதாட்டியின் கால்களை வெட்டி அவர் அணிந்திருந்த கொலுசுகளை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





