--- --:--:-- --

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்..!

3

வில்லிசை வேந்தர் எனப்போற்றப்படும் சுப்பு ஆறுமுகம் காலமானார். அவருக்கு வயது 93. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

 

தமது 14வது வயதிலேயே குமரன் பாட்டு என்ற கவிதைத் தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம் தலைவர் எம் எஸ் கிருஷ்ணன் காந்தியடிகளின் சுயசரிதையை முதன்முதலாக வில்லு பாட்டாகப் பாடினார். கலைவாணரின் 19 திரைப்படங்களுக்கும் நடிகர் நாகேஷின் சுமார் 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவை பகுதிகளை எழுதி திரைத்துறையிலும் பங்காற்றியவர் சுப்பு ஆறுமுகம்.

 

ஏராளமான கதைகளை தனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். வில்லிசை வேந்தர் என போற்றப்படும் சுப்பு ஆறுமுகம் கடந்த 2005ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது, 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Right Menu Icon