--- --:--:-- --

பனிச்சரிவில் சிக்கி தவிப்பவர்களில் மேலும் 8 பேர் மீட்பு..!

1

த்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி தவிப்பவர்கள் மேலும் 8 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் உத்தர காசியிலுள்ள திரௌபதி மலையில் 7 பயிற்றுநர்கள், முப்பத்தி நான்கு மலையேற்றம் வீரர்கள் ஆகியோர் பயிற்சிக்காக வந்தனர்.

 

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியிலிருந்து மேலும் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 

பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20 பேரை தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon