யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது..!
சிவகங்கை அருகே யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக சிவகங்கை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் மாவட்ட வன அலுவலர்கள் அங்கு சென்று சந்திக்கும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுரையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் மூவருக்கும் தகவலின்பேரில் மணியங்குடி கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





