ஆலையில் இருந்து வெளிவந்த வாயுவால் மயக்கமடைந்த மக்கள்..!
சென்னை கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் ஆலையில் வெளிவந்த வாயுவால் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் ரசாயன ஆலையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ரசாயனம் நிரப்பப்படாமல் இருந்து வெளியேறிய வாயுவால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடேசன், தேன்மொழி, அமுதவல்லி ஆகிய மூவரும் மயங்கி கீழே விழுந்தனர்.
இதனையடுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் இருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ் உள்ளே சென்று நிலையில் அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் காவல் துறை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நான்கு பேரையும் மீட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





