கடன் கொடுக்க மறுத்த பெண்ணை தாக்கி கொலை செய்த 2 பேர்..!
குன்னூர் அருகே கடன் கொடுக்க மறுத்த பெண்ணை தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மோசஸ் மனைவி ஜோதிமணி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவருடைய மாமனார் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளனர்.
அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று ஜோதிமணி கூறியதால் ஆத்திரமடைந்த எஸ்தரும் அவருடைய மாமனாரும் தாக்கி ஜோதி மணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் மூடிவைத்து விட்டு சென்றனர்.
நீண்ட நேரம் மனைவி வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மோசஸ் அந்த பகுதியில் தேடிய பொழுது பாழடைந்த வீட்டில் ஜோதிமணி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் எஸ்தரும் அவரது மாமனாரும் கொலை செய்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





