5 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 5 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு மருத்துவமனையின் உதவியாளராக பணிபுரிந்த நபர் மருத்துவராக கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 18ஆம் தேதி சிறுமிக்கு கணேசன் என்பவர் ஊசி செலுத்தி சிகிச்சை அளித்த நிலையில் உடல் கருப்பாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் தைலாபுரத்தில் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் கணேசன் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சட்டவிரோதமாக வீட்டில் சோதனை நடத்தியதில் போலி மருத்துவரை கைது செய்து சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். புகாரின் பேரில் கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





