--- --:--:-- --

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி..!

காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.

 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சில நாட்கள் வரை சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது. அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 260 பேருக்கு நாளை பணி நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon