--- --:--:-- --

அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் பரபரப்பு..!

1

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்தார். இறந்தவர் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்திரா என தெரியவந்தது.

 

உடலை அடையாளம் காட்டியதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி சந்திரா உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்மூலம் இறந்தவர் சந்திரா இல்லை என்பது தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon