--- --:--:-- --

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்று கோவையில் பா.ஜ.க-வினர் கொண்டாட்டம்

Capture3

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக கோவை மாவட்ட பாஜக சார்பாக, ஜமாப் அடித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவரை நாடுமுழுவதும் உள்ள பா.ஜ.கவினர் வரவேற்று வருகின்றனர். இதற்கு ஆதரவாக கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து ஜமாப் அடித்தவாறு ஊர்வலமாக வந்து, மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஆதரவாக முழக்கவிட்டனர்.

பின்னர்,5 ஆயிரம் வாலா சர வெடி வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியா ஒரே நாடு என்ற நிலை அடைந்து விட்டதாக கூறி ஜமாப் அடித்து சாலையில் ஆடி மகிழ்ந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon