நடிகை திரிஷா, நடிகர் சூர்யா ஒன்றாக மேடையில் நடனம்
நடிகை திரிஷா, சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் சூர்யாவுடன் இணைந்து ஆறு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின், சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்திருந்தார்.அதே போல் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த திரிஷாவுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு சூர்யா நடனம் ஆடி இருந்தார்.
இப்படி நான்கு முறை நடிகை திரிஷா, நடிகர் சூர்யா இணைந்து ஒரே படத்தில் திரையில் தோன்றியுள்ளனர்.இந்நிலையில், தனது ஆரம்பகால கட்டத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




