18 வயது நிரம்பாத மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த தந்தை கைது..!
சென்னையில் 18 வயது நிரம்பாத மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவன் தீபக் தனது நண்பன் லோகேஷ் உடன் கடந்த 26ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
இதில் பைக்கை ஓட்டி சென்றவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பின்னால் அமர்ந்து சென்ற லோகேஷ் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். பெற்றோரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக பைக் ஓட்டியதே விபத்து ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வந்த போலீசார்18 வயது நிரம்பாத மகனது இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த குற்றத்திற்காக தீபக் பாலாஜியின் தந்தை சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





