ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இளைஞரின் சடலம் மீட்பு..!
சென்னை அடுத்த ஆவடி அருகே ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞர்கள் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட ரயில் பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய படி சடலமாக கிடப்பதாக ரயில்வே அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்த இளைஞரின் கை, கால்கள் வாய் கட்டு இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





