--- --:--:-- --

ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்களை கட்டியதற்கு அளிக்கப்பட்ட விளக்கம்..!

2

கோவையில் ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்களை கட்டியது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வித்தியாசமான விளக்கத்தை அளித்து இருக்கிறது. கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளில் ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பறை கட்ட தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இது தொடர்பாக பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் விளக்கமளிக்கும் கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் சிறுவர்கள் பயன்படுத்துவதற்காக அவ்வாறு கழிப்பிடம் அமைக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

 

பெரியவர்களின் கண்காணிப்பில் சிறுவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கதவு அமைக்கப்படாமல் இருப்பதாகவும் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு வெளியே வர முடியாது என்பதாலேயே கதவு பொருத்தப்படவில்லை என தெரிவித்திருக்கிறார்.

 

இருப்பினும் சிறுவர்கள் உபயோகம் செய்யும் கழிப்பிடங்களை பெரியவர்களுக்கான கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்திருப்பதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon