கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை ..!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் ஒரு இடங்களில் 24 மணிநேரத்தில் 206.5 மில்லிமீட்டர் மழை பொழிந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைப்பிரதேச பகுதிகள் தாழ்வான பகுதிகள் மற்றும் பல சிறப்பு மண்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





