மணல் கடத்தலில் ஈடுபட்டு சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்து சென்ற டிராக்டர்..!
உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக 13 டிராக்டர்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மாஃபியா கும்பல் சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்து சென்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ராவில் உள்ள நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் சுங்கவரி கவனத்தைச் செலுத்தாமல் அங்கிருந்த தடுப்பை உடைத்தெறிந்து விட்டு சென்ற நிலையில் தொடர்ந்து வந்த மற்ற பக்தர்களும் அங்கு நிறுத்தாமல் அதிவேகத்தில் சென்றனர்.
ராஜஸ்தான் – உத்திரபிரதேசம் எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் செயல்படும் சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.





