மாணவனை விஷம் கொடுத்துக் கொன்ற தாய்..!
காலையில் தனது மகனை விட அதிக மதிப்பெண் எடுத்த சக மாணவனை விஷம் கொடுத்துக் கொன்ற பெண் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மாலதி தம்பதியின் மகன் மணிகண்டன். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர் குளிர்பானத்தில் விஷம் கலந்தது தெரியவந்ததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது சகாயராணி என்ற பெண் மணிகண்டனுக்கு குளிர்பானத்தை கொடுக்குமாறு பள்ளியின் காவலாளியிடம் தெரிவித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மணிகண்டன் தனது மகனை விட அதிக மதிப்பெண் எடுத்த ஆத்திரத்தில் குளிர்பானத்தில் விஷம் கொடுத்துக் கொடுத்தது தெரியவந்ததாக சகாயராணி திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





