--- --:--:-- --

மருத்துவ மாணவிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த இருவர்..!

5

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ மாணவிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலர் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார நிகழ்ச்சிகள் அந்த கல்லூரியில் நடைபெற்ற நிலையில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் இருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி புகார் அளித்தார்.

 

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் காவலர் கண்ணன் அவரது உறவினர் சிவா ஆகியோர் சீண்டலில் ஈடுபட்டதை கண்டு கொண்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் கண்ணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon