அதிமுக மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கும் நீதிமன்றம்..!
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூடிய பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 முந்தைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தது .
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆஜராக வேண்டும் என்பதால் கூடுதல் அவகாசம் கேட்டு ஓ பன்னீர்செல்வம் தரப்பும் முறையிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை இன்று தள்ளி வைத்தார்.






