ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வடமாநில இளைஞர்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழுத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வடமாநில இளைஞர் மீட்கப்பட்டார். வணிக வளாகத்தில் ஒருவர் கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இளைஞரைத் தாக்கியது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





