பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு..!
சோமாலியாவில் உள்ள சொகுசு விடுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர். இதனை தொடர்ந்து மீட்பு பணியில் இறங்கிய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற இந்த சமூகத்தின் ஒட்டு மொத்தமாக 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா அந்நாட்டு அரசு மற்றும் பொது மக்களுக்கு துணை நிற்பதாக கூறியுள்ளது.






