பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தது..!
பாலிவுட் சினிமாவில் ஸ்டைல் என்பதற்கு உதாரணமாக நிறைய நாயகிகள் கலக்கி உள்ளார்கள். அப்படி எப்போதும் பாலிவுட் சினிமாவில் கூறுவது போல Style Iconic ஆக இருப்பது நடிகை சோனம் கபூர் தான்.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள். 2007ம் ஆண்டில் இருந்து நடித்துவரும் சோனம் கபூர் ஸ்டைலாக நிறைய போட்டோ ஷுட்கள் செய்து மக்களை அசத்தியுள்ளார்,
இளம் நாயகியான இவரிடம் இருந்து மக்கள் நிறைய நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறார்கள்.சோனம் கபூர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 2018ம் ஆண்டு இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் கூறியுள்ளார்.






