பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்..!
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை வெளியேற கதைக்களத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.
அதேபோல் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா, கோபியை வீட்டைவிட்டு வெளியேற்ற இப்போது கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு கதைக்களத்தில் உள்ளது.
தற்போது இந்த இரண்டு சீரியல்களிலும் ஒரு முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளது. அதாவது இரண்டு சீரியல்களின் வசனம் எழுதுபர் மாற்றப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இனி சரவணன் என்பவரும், பாக்கியலட்சுமி தொடருக்கு பாரதி தம்பி என்பவரும் தான் இனி வசனம் எழுத இருக்கிறார்களாம்.






