பெரிய அளவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் குலுங்கியதால் அதிர்ச்சி..!
தரையிறங்கும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெரிய அளவில் விமானம் குலுங்கியதால் விமானியின் உரிமத்தை ஆறுமாதம் ரத்து செய்ய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மும்பையிலிருந்து கடந்த மே மாதம் 1ஆம் தேதி தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது.
தரை இறங்கும் பொழுது பெரிய அளவில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். விமானத்தில் விமானிகள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இந்திய விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.






