--- --:--:-- --

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு..!

7

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் வழக்கம் போல் பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

ஈரோட்டில் நடைபெற்று வரும் தகவல் தமிழ்நாடு அரசு சார்பில் வேலுநாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில் இசை நாட்டியத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். முன்னதாக புத்தக கண்காட்சியை பார்வையிட்ட பிறகு சிலரிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார். பதினோராம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் வழக்கம்போல் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon