விவாகரத்து கோரிய மனைவி..! கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு..!
விவாகரத்து கோரிய மனைவியின் குழந்தைகளும் அமைதியான சூழலில் வாழ்வதற்காக கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தொழிலதிபரான தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது கணவரை வீட்டை விட்டு வெளியேறி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். மனைவியை கணவர் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா கணவர் தெரிவிக்கும் பொழுது ஒரே வீட்டில் இருக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறினார். இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் காவல்துறை உதவியோடு அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





