--- --:--:-- --

விளம்பர பலகை விபத்தில் 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி..!

1

சென்னையில் விளம்பர பலகை மீது மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து மோதி நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளார்.

 

ஆலந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த விளம்பர பலகை மாநகர பேருந்து மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முக சுந்தரம் என்பவர் பலத்த காயமுற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

 

அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் போக்குவரத்து கழக நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குடும்பத்துடன் நிதியை வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon