--- --:--:-- --

திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு..!

2

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் கூட்டத்திற்கு தடை கோரி பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது வழக்கின் வாதங்களை முன்வைக்க மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியிலிருந்து வரவேண்டி இருந்ததால் விசாரணையை ஒத்திவைக்குமாறு ஓ பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது.

 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon