--- --:--:-- --

கோழிக்கறி உணவு சாப்பிட்ட பொறியியல் மாணவர் உயிரிழப்பு..!

7

சென்னையில் கோழிக்கறி உணவு சாப்பிட்ட பொறியியல் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நபர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு மற்றும் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டுள்ளார். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டு உள்ளது.

 

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon