--- --:--:-- --

12ம் வகுப்பு மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

4

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் என்பவர் பாடம் எடுக்க வந்துள்ளார்.

 

பள்ளியில் இயற்பியல் பாடத்திற்கான தேர்வில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதி வந்தனர். அப்போது விரைவாக தேர்வு எழுத கூறிய ஆசிரியர் நந்தகோபால் பிரம்பால் மாணவர்களின் முதுகில் அடித்துள்ளார்.

 

இதனை அறிந்த பெற்றோர் மாணவர்களுடன் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணப்ரியா ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon