--- --:--:-- --

அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த மக்கள்..! வைரலாகும் வீடியோ..!

5

யில் பயணங்களில் அலட்சியமாக இருந்தால் என்ன நிகழும் என்பதை பிரதிபலிக்கிறது ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசாவில் புவனேஸ்வர் அருகே சிக்னலுக்காக காத்திருந்தது ஒரு ரயில். அப்பொழுது இன்னொரு தண்டவாளத்தில் இருந்த ரயில் பயணிகள் சிலர் அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

 

அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரயில் தண்டவாளத்தில் பயணிகள் அலட்சியமாக நடக்கின்றனர். இதில் சில பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிக் கொண்டனர்.

 

இதனை அங்கிருந்த ரயில் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டது இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்படி அலட்சியமாக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர் என்பதற்கு இந்த வீடியோ எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon