பெற்றோர் இல்லாமல் மாணவியின் உடல் மறு கூராய்வு..!
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. பெற்றோர் தரப்பில் எதுவுமில்லாமல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு ஆய்வு நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரு பள்ளிக்கூட மாணவி மரணம் அடைந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனிடையே இன்று மறு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு மாணவியின் பெற்றோர் இல்லத்தில் ஒட்டப்பட்டது.
இதன்படி பிற்பகல் ஒரு மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. இந்த பிரேத பரிசோதனையில் மாணவியின் பெற்றோர் எவரும் இடம்பெறவில்லை. முன்னதாக பரிசோதனைக்கு சென்ற மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.





