காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக 13 பேர் உயிரிழப்பு..!
காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் யாத்திரையில் 13 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அமர்நாத் குகைக் கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் குறுகிய நேரத்தில் மிக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழலில் நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்களில் சிலர் அடித்து செல்லப்பட்டனர். 13 பேர் இறந்த நிலையில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமர்நாத் குகைக்கோயில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை எல்லை பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் நிலைமை சீராகும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பாதுகாப்பு படையின் செய்தித்தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறியுள்ளார். இதற்கிடையே அமர்நாத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்





