--- --:--:-- --

ஷின்சோ அபேவிற்க்கு மரியாதை – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி..!

1

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்க்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள்பிரதமர் சின்சோ அபே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 

துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று ஒரு நாள் இந்தியா முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் தினமும் காலை ஏற்றக்கூடிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon